மணல் லொறிக்குள் நசுங்கிய கார்: அருட்தந்தை உட்பட இருவர் பலி

Prathees
4 years ago
மணல் லொறிக்குள் நசுங்கிய கார்: அருட்தந்தை உட்பட இருவர் பலி

திருகோணமலை, ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில்   இன்று (01) காலை  9.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

திருகோணமலை, அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்குத் தந்தையான கணேஷப்பிள்ளை நிதிதாசன் (49) மற்றும் அவர் பயணித்த காரை செலுத்தி வந்த காரின் சாரதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4