எல்லவல நீர்வீழ்ச்சியில் குளித்த இரு இளைஞர்கள் பலி

Prathees
4 years ago
எல்லவல நீர்வீழ்ச்சியில் குளித்த இரு இளைஞர்கள் பலி

வெல்லவாய - எல்லவல நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று காலை தமது நண்பர்கள் ஐவருடன் குறித்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற பெருமளவானோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4