நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை.. அஜித் தரப்பு விளக்கம்

Reha
4 years ago
நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை.. அஜித் தரப்பு விளக்கம்

நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என அஜித் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது.  இப்படத்தை பற்றி நாள்தோறும் பலரும் பெருமையாக பேசி வருகின்றனர். இந்த படம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது.  

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்து இருந்ததாக பிரபல தனியார் தொலைகாட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4