இலங்கையில் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

Nila
4 years ago
இலங்கையில்  பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெரும்பாலான சிறுவர்களின் பெற்றோர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்று கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெருமளவிலான சிறுவர்களின் பெற்றோர்களும் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி வைத்தியசாலையில் தொடர்ந்து முப்பது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இத்தகைய நிலையில் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தாம் அத்தகைய பெற்றோர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் மூலம் பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றுவது அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறான பெற்றோர்களில் சிலர் ஒரு தடுப்பூசியையாயினும் இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4