வைத்திய சேவைகள் முடங்கும் அபாயம் - சுகாதார தொழிற்சங்கம் நாளை முதல் போராட்டத்தில்!

Mayoorikka
4 years ago
வைத்திய சேவைகள் முடங்கும் அபாயம் - சுகாதார தொழிற்சங்கம் நாளை முதல் போராட்டத்தில்!

நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ,  யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர். 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4