இன்று வியாழக்கிழமை குரு பகவானைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை....

#spiritual #God #Guru
இன்று வியாழக்கிழமை குரு பகவானைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை....
  • ஆங்கிரச முனிவருக்கும், ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் ‘பிரகஸ்பதி’ .  தவத்தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார்.  
  • கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.  
  •  குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார்.
  •  மனைவி தாரா. வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர்.  
  •  குரு – தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு.
  •  வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர்.
  •  எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3
  •  பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் ஐவரும் இவரது உடன்பிறந்தவர்கள்.  
  •  அதிதேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும்.  
  •   நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், துாயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கம் அற்றவர் என இவர் போற்றப்படுகிறார்.
  •  குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான்.
  • தென்குடித்திட்டை, ஆலங்குடி, திருவலிதாயம் (பாடி), திருச்செந்துார், குருவித்துறை, ஆழ்வார்திருநகரி, திருத்தணி இவருக்குரிய பரிகார தலங்கள்.
  •  தானியம் – கொண்டைக் கடலை, கிழமை – வியாழன், நிறம் – மஞ்சள், ரத்தினம் – புஷ்ப ராகம், உலோகம் – பொன், ஆடை – மஞ்சள் ஆடை.
  •  ‘சனியைச் சாய்வாய் கும்பிடு!’ ‘குருவை நேராய் நின்று கும்பிடு’ என்பார்கள். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும்.
  •  எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குருபகவானை மட்டும் அவரவரே வழிபட்டால்தான் நன்மை கிடைக்கும்.  
  •  நாட்டை திறமையானவர்களை கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தைகளை கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை.  
  •  திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும்.  
  •  குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர்.
  • சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், சதுர பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி அமர்பவர். சுக்கிரனுக்கு எதிரானவர். குளுமையான பொருளை விரும்புபவர்.
  •  தயிர்ச்சாதம், கற்கண்டு சாதம், கொண்டைக்கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு வைத்து வியாழக்கிழமை அன்று மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து குருபகவானுக்கு தீபம் ஏற்றினால் குருவருள் கிடைக்கும்.  பகலில் வழிபடுவது  சிறப்பு.  
  •  பூரண சுபகிரகம் என்னும் பெருமை கொண்டவர் குருபகவான் ஒருவரே.  
  •  அமைச்சன், தேவகுரு, சிகிண்டிசன், ஜீவன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், சுபகிரஹன், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என 18 பெயர்கள் இவருக்குண்டு.  
  •  தனுசு, மீனம் சொந்த வீடுகள். ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவரே.  
  •  திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரை வழிபட்டு கிரகங்களில் சுபகிரகமாகும் பேறு பெற்றார் குரு. அதனால் ராஜகிரகம் என சிறப்பிக்கப்படுகிறார்.
  •  பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், இரண்டுக்கும் அதிபதி இவரே.  
  •  தனம், புத்திரகாரகர் என்பதால் குருதசை நடக்கும் காலத்தில் பிள்ளைகள் மேன்மையான நிலையில் விளங்குவர்.  
  • குருபகவானின் பார்வை ஜாதகத்தில் பலமாக இருந்தால் ஞானம், தெளிந்த அறிவு, ராஜ யோகம், நிதி, நீதி,  பணப்புழக்கம், நல்ல உறவுகள் அமையும்.