இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏழரை மணிநேர மின்வெட்டு
#SriLanka
#Power
#history
Mugunthan Mugunthan
4 years ago
நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பின் நேற்று ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் படி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில், 5 மணி நேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்பட்டதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட்டது.
மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் நிதி ஒதுக்கிட்டை மேற்கொள்ளாவிட்டால், மத்திய வங்கிக்குக்கும், திறைசேரிக்கும் எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே