சுவிட்சர்லாந்து பற்றிய சில இனிக்கும் தகவல்கள் (பாகம் - 02)

Reha
2 years ago
சுவிட்சர்லாந்து பற்றிய சில இனிக்கும் தகவல்கள் (பாகம் - 02)
  • சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ தேசிய மதம் எதையும் கொண்டிருக்கவில்லை
  • கிறிஸ்தவம் சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மை மிக்க மதமாக உள்ளது.
  • சுவிஸில் 2005 யூரோபரோமீட்டர் வாக்கெடுப்பானது 48% மக்கள் இறை நம்பிக்கை உடையோராகவும், 39% "மெய்ப் பொருள் அல்லது வாழ்வின் சக்தி" கொள்கையில் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்களாகவும், 9% இறைமறுப்பாளர்களாகவும் மற்றும் 4% அறியவொணாமை வாதிகளாகவும் இருப்பதாக கண்டறிதுள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் கலாசாரம் அண்டைநாடுகளின் பாதிப்பைக் கொண்டிருக்கிறது,
  • இருப்பினும், காலம் செல்லச் செல்ல தனித்தன்மையான எதனையும் சாராத சில வட்டார வேறுபாடுகளைக் கொண்டுள்ள தனித்துவமான கலாசாரம் வளர்ச்சியடைந்தது
  • சுவிற்சலாந்தின் பெரும்பாலான மலைப்பகுதிகள் குளிர்காலத்தில் உற்சாகமான பனிச்சறுக்கு கலாச்சாரத்தையும் கோடைக்காலத்தில் நடை (உலாவுதல்) கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன
  • சில பகுதிகள் ஆண்டுதோறும் கேளிக்கைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன, அந்த கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உகந்ததாகவுள்ளது.
  • மேலும் வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலம் ஆகிய காலங்கள் சுற்றுலாப் பயணிகளின்றி அதிகபட்சம் சுவிஸ் மக்கள் மட்டுமே இருக்கின்ற பருவங்களாகும்
  • பாரம்பரிய உழவு மற்றும் மேய்ச்சல் கலாச்சாரமும் பல பகுதிகளில் மேலோங்கியுள்ளன
  • சுவிற்சலாந்தில் திரைப்படத் துறையைப் பொறுத்த வரை அமெரிக்கத் தயாரிப்புகளே அதிகப் பங்களிக்கின்றன
  • சுவிஸ் முழுவதும் நாட்டுப்புறக்கலைகள் சில அமைப்புகளால் உயிர்ப்புடன் காக்கப்பட்டு வருகின்றன
  • அவை சுவிட்சர்லாந்தின் இசை, நடனம், கவிதை மற்றும் மரச்சிற்பக் கலை மற்றும் சித்திரத் தையல் கலை ஆகியவற்றில் பெரிதும் இடம்பெறுகின்றன
  • சுவிஸ் இசையின் முக்கிய அம்சமாக அக்கார்டின் விளங்குகிறது.
  • சுவிஸ் கூட்டமைப்பானது அது உருவாக்கப்பட்ட 1291 இலிருந்து, பெரும்பாலும் ஜெர்மன் பேசும் பகுதிகளால் உருவானதாக இருந்ததால், முந்தைய இலக்கிய வடிவங்கள் அனைத்தும் ஜெர்மன் மொழியிலேயே உருவாகி இருந்தன.
  • சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பில் பத்திரிகை சுதந்திரமும் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் உரிமையும் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய செய்திகளை மூன்று தேசிய மொழிகளில் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பிக்கொண்டே உள்ளது.
  • பெரும்பாலும் அனைத்து சுவிஸ் ஊடகங்களுக்கும், அதுமட்டுமின்றி பல அயல்நாட்டு ஊடகச் சேவைகளுக்கும் செய்தி வழங்குகிறது.
  • வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான செய்தித்தாள்களை அச்சிடும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்கியுள்ளது
  • செய்தித்தாள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, கலாச்சார வேறுபாடே காரணமாகும்
  • சுவிற்சலாந்தில் அச்சு ஊடகத்திற்கு மாறாக, ஒலிபரப்பு ஊடகங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உறுதியான கட்டுப்பாட்டிலேயே இருந்து வதுள்ளது
  • சுவிஸ் ஒலிபரப்பு கார்ப்பரேஷன், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கும் ஒலிபரப்புவதற்கும் கட்டணம் செலுத்துகிறது
  • வானொலி நிகழ்ச்சிகள் ஆறு மைய ஸ்டுடியோக்களிலும் நான்கு வட்டார ஸ்டுடியோக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஜெனீவா, ஜூரிச் மற்றும் லுகானோ ஆகிய இடங்களிலும் தயாரிக்கப்படுகின்றன
  • மேலும் விரிவான கேபிள் நெட்வொர்க்கின் சேவையால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் அண்டை நாடுகளின் நிகழ்ச்சிகளையும் காண முடிகிறது.