வலிமை திரைப்படம் ஓடிய கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு குண்டு வீசிய நபர் கைது

Keerthi
4 years ago
வலிமை திரைப்படம் ஓடிய கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு குண்டு வீசிய நபர் கைது

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அச்சமயத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட லட்சுமணன் என்ற நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4