விரதங்கள் கூடிவரும் இந்நாட்களில் வீட்டில் சைவ மரக்கறி பிரியாணி செய்து பாருங்கள்...
#Cooking
#Vegetable
#Biryani
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை:
- பாசுமதி அரிசி - ஒரு கப்
- தண்ணீர் முக்கால் கப்
- தேங்காய் பால் - முக்கால் கப்
- நெய் - 100 கிராம்
- ரீபண்ட் ஆயில் - 100 கிராம்
- முருங்கை பீன்ஸ்- 50 கிராம்
- பச்சை பட்டாணி - 50 கிராம்
- பீன்ஸ் - 50 கிராம்
- கேரட் - 50 கிராம்
- எலுமிச்சை பழம் - 1
- நெய்- தேவையான அளவு
- கொத்த மல்லி இலை - தேவையான அளவு
- புதினா இலை-தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 3 எண்ணம்
- முந்திரி பருப்பு - 6 எண்ணம்
- மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பட்டை - ஆள்காட்டி விரல் அளவு
- கிராம்பு - 2 எண்ணம்
- ஏலக்காய் - 3 எண்ணம்
- சின்ன வெங்காயம்- 100 கிராம்
- இஞ்சி- சுண்டு விரல் அளவு
- வெள்ளைப்பூண்டு - 3 பற்கள்
- கசகசா - 2 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு & தேவையான அளவு
செய்முறை:
- அரிசியைக் நன்றாக கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். இதனிடையே, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத் தெடுங்கள்.
- காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
- இதன் பின், குக்கரில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
- நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
- இதன் பிறகு, காய்கறி, தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள் தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
- ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.
- இறுதியாக முந்திரிப் பருப்பு மற்றும் மேற்புறமாக தூவி சூடாக பரிமாறுங்கள். சூப்பரான புலாவ் சுவை கிடைக்கும்.