பஸிலுடன் முரண்பாடு எதுவும் இல்லை! - விமலின் கருத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் பதிலடி

Prasu
4 years ago
பஸிலுடன் முரண்பாடு எதுவும் இல்லை! - விமலின் கருத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் பதிலடி

நிதி அமைச்சருக்கும் தனக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், மத்திய வங்கி ஆளுநரைச் சந்திப்பதற்குக்கூட நிதி அமைச்சர் நேரம் ஒதுக்குவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் மத்திய வங்கியில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஆளுநர்,

"அவ்வாறு எந்த விரிசலும் இல்லை. நாட்டுக்குத் தேவையான திட்டங்கள் உரிய வகையில் வகுக்கப்பட்டு வருகின்றன" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4