ஒரு டொலருக்கு ரூபா 240 செலுத்த அமைச்சரவையில் யோசனையை முன்வைக்கவுள்ள அமைச்சர்

Prathees
4 years ago
ஒரு டொலருக்கு ரூபா 240 செலுத்த அமைச்சரவையில் யோசனையை முன்வைக்கவுள்ள அமைச்சர்

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டு பிரமுகர்கள் இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.

எவ்வாறாயினும்இ இலங்கை டொலரின் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலைமை காரணமாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளூர் வங்கிகள் மூலம் இலங்கைக்கு பணத்தை அனுப்ப முடியும் என அமைச்சர் கூறுகிறார்.

 தற்போது ஒரு டொலருக்கு 10 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன் அதனை மேலும் 30 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4