முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  வெளிநாட்டு பெண்ணால் கடைக்கு சேதம்: இரு தரப்பும் சமரசம்

Prathees
4 years ago
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  வெளிநாட்டு பெண்ணால் கடைக்கு சேதம்: இரு தரப்பும் சமரசம்

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம்  பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொ
ழும்பில் தங்கியிருந்த தம்பதியினர் காலிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

முச்சக்கரவண்டி பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்துள்ளது.

பொஹத்தரமுல்ல தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள எதிர் பாதையில் குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், செங்கல் குவியலை இடித்து, கடையின் வாயிலை சேதப்படுத்தியது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கடைக்கு 20,000 ரூபாய்க்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது;.

கடை உரிமையாளரின்  தயவில் இரு தரப்பினரும் உடன்படிக்கை செய்து வெளிநாட்டு தம்பதியினரின் வசமிருந்த 12,000 ரூபா நட்டத்தை செலுத்தியதையடுத்து, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.

விபத்தின் போது வெளிநாட்டு பெண்ணால் முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4