அநுராதபுரம் – வவுனியா புகையிரத மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!

Mayoorikka
4 years ago
அநுராதபுரம் – வவுனியா புகையிரத மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!

அநுராதபுரத்திற்கும், வவுனியாவுக்கும் இடையிலான புகையிரத மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது.

மஹவ – ஓமந்தை புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால் இன்று முதல் அநுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான பகுதி தற்காலிகமாக மூடுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த திட்டம் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால், அந்த புகையிரத மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின்படி இந்தத் திட்டம் அமுலாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4