சிசு செரிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
சிசு செரிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மாணவர்களுக்கான அனைத்து சிசு செரிய என்ற பஸ் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ண அங்ஷ தெரிவிக்கையில்,

அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளுக்கு தேவையான எரிபொருள் டிப்போக்களில் இருப்பதாகவும் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4