வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவில் அமைதியின்மை

#SriLanka
வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவில் அமைதியின்மை

கொழும்பு கோட்டையில் உள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மின் தடை காரணமாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த பிரிவுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியமையினால் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில்  வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது, ​​கொன்சியூலர் பிரிவினால் நடத்தப்படும் குறித்த தனியார் கட்டிடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மின் விநியோகத்தை துரிதமாக வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4