பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம்

#SriLanka #Jaffna #Tamil People
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வரவேண்டும் வரவேண்டும் ஐ.நா அமைநிப்படை வரவேண்டும்., வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும்., தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்., எங்கே எங்கே உறவுகள் எங்கே? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4