மாநகர சபை ஊழியர் மீது ஓரினச்சேர்க்கை அழுத்தம்.. மேயரின் சகோதரர் கைது

Prathees
4 years ago
மாநகர சபை ஊழியர் மீது ஓரினச்சேர்க்கை அழுத்தம்.. மேயரின் சகோதரர் கைது

தம்புள்ளை மாநகர சபை ஊழியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய தம்புள்ளை மேயரின் சகோதரரை கைது செய்ய தம்புள்ளை பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவரது குடும்பத்தினர் நேற்று தம்புள்ளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்துஇ தம்புள்ளை மாநகர சபை உறுப்பினரை தாக்கிய தம்புள்ளை மேயரின் சகோதரர் ஒருவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டில் கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது

ஊனமுற்ற நகர ஊழியர் மாநகர சபையின் அன்றாட வேலைகளை செய்தாலும், மேயரின் சகோதரன் வீட்டில் பணிபுரியுமாறு பணிக்கப்படுவதாகவும், இரவு பகலாக வீட்டில் உழைக்க வேண்டியுள்ளதாகவும் தாக்கப்பட்டவரின் தாய் கூறுகிறார்.

சந்தேக நபர்  அவரை இயற்கைக்கு மாறான ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்த முயற்சித்துள்ளதாக குடும்பஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது தாயார் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4