பொருட்கள் வாங்கச் சென்ற சிறுவனின் முகத்தை கடித்து குதறிய நாய்: சிறுவனின் முகத்தில் சத்திரசிகிச்சை

Prathees
4 years ago
பொருட்கள் வாங்கச் சென்ற சிறுவனின்  முகத்தை கடித்து குதறிய நாய்:  சிறுவனின் முகத்தில் சத்திரசிகிச்சை

12 வயது சிறுவனின் முகத்தை  நாய் கடித்த நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1ஆம் திகதி மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் இம்மாதம் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன்  கடந்த 1ம் திகதி மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளான்.

அங்கு கடையின் அருகே சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அதை உடைத்து சிறுவனின் முன் பாய்ந்து  முகத்தை கடித்து குதறியது.

நாயை அங்கு நின்றவர்கள் துரத்திச் சென்றதாகவும், ஆனால் இந்த விபத்தில் சிறுவனின் முகத்தின் வலது பக்கம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் கழுத்தின் பின்புறம் பல பற்கள் பதிந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குழந்தை பொல்பித்திகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு முகத்தில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் பதிந்துள்ள பற்கள் நரம்புகளைத் தாக்கியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

குழந்தையின் தந்தை வெளிநாட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4