சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

Mayoorikka
4 years ago
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக திணைக்கம் தெரிவித்துள்ளது.

01 July 2022 – 30 September 2022 திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4