திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

Prabha Praneetha
4 years ago
திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ”எதற்கும் துணிந்தவன்” படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பசங்க 2 படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்தார்.

அதன்பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருந்தால் மேலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.

சூர்யா நடித்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டரை ஆண்டுகளாகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாவதால், அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4