யார் இந்த நெதுன்கமுத விஜய ராஜா.....வரலாறு இதோ

Prathees
2 years ago
யார் இந்த நெதுன்கமுத விஜய ராஜா.....வரலாறு இதோ

1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாவது வாரம் இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் மைசூர் ராஜ்யத்தில் பழமையான இந்திய உடையார் அரச பரம்பரைக்கு சொந்தமான மகாராஜாவின் மாளிகையில் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அந்த செய்தியை அரண்மனை சேவகிகள் மைசூர் மகாராஜா ஜெய சாமரராஜேந்திர உடையாருக்கு தெரிவித்தனர்.

மகாராஜாவும் மகாராணியும் அந்த செய்திகேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் வேளையில் அரசனை சந்திக்க வந்த மாளிகையின் யானைகளை பராமரிக்கும் தலைவன் யானை பந்தியில் புதிதாக சிறுது நேரத்துக்கு முன்னர் இரண்டு யானைகுட்டிகள் பிறந்ததாக கூறினான்.

அன்று தொடக்கம் மகாராஜாவுக்கு பிறந்த குழந்தையும் யானைக் குட்டிகள் இரண்டும் அனைவரினதும் அன்பான பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

இதேவேளை மாளிகையில் மகா ராஜாவின் உறவினர் நீண்ட காலமாக சுகவீனமுற்று இருந்தார். அவருக்கு எவ்வித சிகிச்சையும் நலம் அளிக்க வில்லை. அவ் வேளையிலேயே இலங்கையில் வசிக்கும் தேரர் ஒருவர் வைத்தியம் செய்வதாக தகவல் மகாராஜாவுக்கு கிடைத்தது. அத் தேரர் வைத்தியரான நீலம்மஹர தேரராவார்.

மைசூர் மாளிகையின் நோயாளி நீலமஹர தேரரிடம் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டார்.மூன்று மாதங்களுக்குப் பின்னர் நோயாளி முற்றிலுமாக சுகமடைந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த மகாராஜா தேரரிடம் அவருக்கு என்ன தேவையோ அதனை வழங்க தயாராக இருப்பதாக கூறினார். அவர் விரும்புவதை கேட்குமாறு கூறினார். நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது சுகமாக்கவே தவிர வேறு எதனையும் அவர் விரும்புவதில்லை என்று அரசரிடம் கூறினார். ஆனால் அந்த பதிலில் திருப்தி அடையாத அரசர் மாளிகையில் எல்லோரின் அன்பிற்கும் பாத்திரமாக வளர்ந்து வந்த யானைக் குட்டிகள் இரண்டையும் நினைவு பரிசாக தேரருக்கு வழங்குவதற்கு விரும்பினார். நீலம்மஹர தேரரும்அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஐந்து வயதான இரண்டு யானை குட்டிகளும் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டு நீலம்மகஹரைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் 'நவம் ராஜா' கங்காராமைக்கு வழங்கப்பட்டது. மற்றைய யானையான 'விஜயராஜா' இளம் வயதை அடையும் வரை நீலம்மஹர தேரரிடமே வளர்ந்தது.

25வருடங்களுக்கு பின்னர் 'விஜயராஜா '' பண்டாரகம பாராளுமன்ற உறுப்பினர் ஹர்பட் விக்ரமசிங்கவுக்கு சொந்தமானது. நீல மஹரவிலிருந்து கொண்டுவரப்பட்ட விஜயராஜா ஹொரணயில் பல காலமாக விக்ரமசிங்கவின் பராமரிப்பில் இருந்தது.

இங்கே இருக்கும் வேளையில் 1978ஆம் ஆண்டு நெதுன்கமுவையை சேர்ந்த வைத்தியர் தர்மவிஜய' விஜய ராஜா' 'யானையை கண்டார். பார்த்தவுடனேயே அதன் அழகையும் கம்பீரத்தையும் கண்ட அவர் உடனடியாக அதனை விலைக்கு வாங்கினார்.

அதன் பின்னர் 'விஜயராஜா 'வைத்தியர் தர்மவிஜயவின் பாதுகாப்பில் அன்புடன் நெதுன்கமுவிலேயே வசித்தது. அது ஆசியாவில் வசிக்கும் நீண்ட தந்தங்கள் உடைய யானைகளில் ஒன்றாகும்.

வைத்தியர் தர்ம விஜயவின் இறப்புக்குப் பின்னர் அவரது மகனான ஹர்ஷ தர்ம விஜய யானையை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 10அடி 5அங்குல உயரமான ராஜா எல்லா வகையிலுமே கண்டி தலதா பெரஹரா தந்த பேழையை தாங்குவதற்கான தகுதியை கொண்டிருந்தது.

அதனால் பல தசாப்தங்களாக செங்கடகளல எசல பெரஹர தந்த பேழையை தாங்கிச் சென்ற 'ராஜா' வுக்கு பின்னர் நெதுன்கமுவே ராஜா அதனை தாங்கிச் செல்லும் அதிர்ஷ்டசாலியானது. ஒவ்வொரு முறையும் கண்டியை நோக்கி 90கிலோமீட்டர் தனது யானைப் பாகனாக கலு மாமாவுடன் நடை பயணத்திலேயே ராஜா சென்றது. அவ்வாறு செல்லும் வேளையில் பூரண பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டிலிருந்து அது வருடந்தோறும் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தது. அதன் யானைப்பாகன் வில்சன் கொடிதுவக்கு. அதன் காரணமாக மக்கள் நெதுங்கமுவ ராஜாவை 'நடந்து செல்லும் ஒரே யானை' 'ஆசியாவின் உயரமான யானை' 'எமது நாட்டின் பெரிய யானை' என அழைத்தார்கள்.

அலங்கார உடை தரித்து கம்பீரமாக தலதா பெரஹரவில் பயணிக்கும் ராஜா தலதா தந்த பேழையை சுமந்த பின்னர் மிகவும் கவனமாகவே அடி எடுத்து வைக்கும். ராஜா தலதா பெரஹராவில் மாத்திரமல்ல இரத்தினபுரி மகா சமன் தேவாலய, பெல்லன்வில, களனி, கடுவல, கம்பஹா, வென்னப்புவ போன்ற பிரதேசங்களில் நடைபெறும் பெரஹரவிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக தலதா தந்த பேழையை தனது முதுகில் சுமந்து செல்வதற்கு பாக்கியம் செய்த நெந்துன்கமுவே ராஜா தனது 69வது வயதில் சியநே கோரளயில் தனது இறுதி மூச்சை விட்டுள்ளது.

நெந்துன்கமுவே ராஜா தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ராஜாவின் உடலை எதிர்கால பரம்பரை தரிசிப்பதற்காக பாதுகாக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

பிரதி பண்ணப்பட்டது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!