மூளையின் செயற்பாட்டை பாதித்து நினைவாற்றல், மனச்சோர்வை உண்டாக்கும் உணவை தவிருங்கள்.

#Health #Food #Benefits
மூளையின் செயற்பாட்டை பாதித்து நினைவாற்றல், மனச்சோர்வை உண்டாக்கும் உணவை தவிருங்கள்.

வீட்டின் ஆரோக்கியம் இல்லத்தரசிகள் கையில் என்பதை மறுக்க முடியாது. அன்றாடம் சமைக்கும் உணவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். மூளையை பாதிக்கும் எந்த வகையான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கடுகு எண்ணெய், நினைவாற்றலை பாதிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அதனால் ஆலிவ் எண்ணெய் போன்ற மூளை ஆரோக்கியத்துக்கு உதவி செய்யும் எண்ணெய் பயன்படுத்தலாம்.

சர்க்கரை, ரத்தத்தில் குளுக்கோஸை கட்டுப்படுத்தும் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இது மூளையின் நினைவாற்றலுக்கு முக்கியமான ஹிப்போ காம்பஸை வீக்கமடைய செய்வதால், மூளை 100% வேலை செய்வதில் குறைபாடு ஏற்படும். சர்க்கரையை தவிர்க்க முடியாது, குறைக்கலாம். ​துரித உணவுகள், ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட் கொண்டவை. இது மந்தமான மனநிலை, மனச்சோர்வு மற்றும் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

​டிரான்ஸ் கொழுப்புகள், செயற்கையாக பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களில் உள்ள இவை அல்சைமர் நோய், நினைவாற்றல் பிரச்னையை ஏற்படுத்தும். வறுத்த உணவுகள், டோனட்ஸ், வறுத்த இறைச்சிகள், பீட்சா, ரொட்டி, க்ரீம்களில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகமுள்ளன. செயற்கை இனிப்பு பானங்கள், நாவிற்கு சுவையளித்தாலும், மூளைக்கு நல்லதல்ல. இதிலுள்ள ஃபெனாலாலனைன், மெத்தனால் மற்றும் அஸ்பார்டிக் அமிலம், நரம்பியல் பிரச்னையை ஏற்படுத்தி, மூளை பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

ஆல்கஹால், அதிகமாகும் போது மந்தமான பேச்சுத்திறன், எதிர்மறை தாக்கங்கள், நடைப்பயிற்சி மற்றும் மூளை பாதிப்பை உண்டாக்கலாம். சிலர் மனநோயாலும் பாதிக்கப்படுவர். பாதரச மீன்கள், அசைவ உணவு உண்பவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவது உண்டு. சில மீன்கள் பாதரசம் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. அவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் வளர்ந்த மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். வாள்மீன், டூனா, கானாங்கெளுத்தி, விலாங்குமீன், சூரை மீன், சுறா மீன், கோய் மீன் போன்றவை பாதரசம் நிறைந்த மீன்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!