பப்பாளிப்பழத்தின் மகத்துவம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#Health #Fruits #Benefits
பப்பாளிப்பழத்தின் மகத்துவம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளிப்பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையைத் தரும். பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • இதில் விட்டமின் C, A, E சத்துக்கள் நிறைந்திருப்பதால் கண்களுக்கு நல்லது.
  •  அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.
  • பப்பாளிக்காயை குழம்பாக செய்து சாப்பிட்டால், பிரசவித்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்.
  • பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  • பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டுவர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
  • பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.
  • பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
  • பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள விஷக்கிருமிகளால் ஏற்படும் நோயினை தடுக்கலாம்.
  • விட்டமின் ேக மற்றும் சி சத்து குறைபாடு காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்னைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துக்களும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.
  • நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவு குறைவு.
  • அஜீரணக் கோளாறு சரி செய்யப்படும் என்ஸமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். மலச்சிக்கல் பிரச்னையும் வராது.
  • பப்பாளிப்பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் பொறுத்து தண்ணீர் ஊற்றி கழுவினால் முகம் பளபளக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!