சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ் சான்றோன் தமிழ் பேரறிஞர் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அமைப்பு
சுவிற்சர்லாந்து நாட்டில், சூறிச் டூர்டன் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் விஷ்னு துர்க்கா ஆலயத்தில் தவத்திரு சரவணபவ சர்மா ஐயா அவர்களின் அயராத முயற்சியால் தமிழர்களின் அடையாளம், தமிழை உலகம் போற்ற ஆணிவேராக அமையவும், தமிழை உலகம் அறிந்துகொள்ளவும் காரணமாக விளங்கும் மற்றும் தமிழை உலகம் முழுக்க பரப்ப காரணமாக இருக்கும், பலரால் தமிழ் கடவுளாகவும். போற்றி வணங்கப்படும் தமிழ் சான்றோன் தமிழ் பேரறிஞர் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அமைப்பு விரைவாக இடம்பெற இருக்கிறது. அதன் ஆயத்தமாக திருவுருவ்ச்சிலை இந்தியாவிலிருந்து உலகத் தமிழ் கழகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜூன் மாதம் விஷ்னு துர்க்கை அம்மன் திருவிழாவை ஒட்டி இச்சிலை அமைவு கொள்ளும் என்பதை திருவள்ளுவரின் பிள்ளைகளுக்கு சந்தோஷமாக சர்மா ஐய்யா அவர்கள் கூறிக்கொள்கிறார்.
அதன் ஆரம்பப்படியாக ஒரு வெங்கல திருவுருவச்சிலையை ஐந்தாவது குரவராக கோவிலில் பிரதிட்சை செய்து வைக்கும் வைபவம் இடம்பெறும் எனவும். கூறியிருக்கிறார்.
இதனூடாக சுவிஸ் மக்களிடையே தமிழின் பற்றும் பெருமையும் அதிகரிக்கும் என்பது இந்த திருவுருவச்சிலை அமைப்பவர்களின் திட்டமாக இருக்கிறது.
இத்திருவுருவச்சிலை பிரதிஸ்டைக்கு எண்ணெய்க்காப்பு சாத்துதல் தொடர்பாக விரைவாக அறியத் தரப்படும்.இவ் வரலாற்று விழாவில் அனைத்து மக்களையும், தமிழ் பற்றாளர்களையும் வந்து சிறப்பிக்கும்படி கேட்கப்படுகிறார்கள்.
இது வெறும் அகரம் எழுதுதலே தவிர, அவரது நோக்கமே ஒவ்வொரு ஆலயங்கள், நிறுவனக்களிலும், பொது இடங்களிலும் எமது தமிழ் சான்றோன் திருவள்ளுவனின் சிலை நிறுவப்படவேமண்டுமென்பதேயாகும்.
ஐயாவின் முயற்சிக்காக எமது லங்கா4 ஊடகம் ஒரு ஆணியாக இருப்பதையிட்டு மகிழ்வடைகிறோம்.
அனைவரும் ஒன்றாக எந்த வேறுபாடுகளுமின்றி கலந்து சிறப்பிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.
வெள்ளை மலை சூழல்
வெண் முகில்கள் சூழ
கொள்ளை அழகோடு
கோடி மக்கள் நாட
பல் பெருமை பேசும்
பைந்தமிழின் வாசம்
தொல் பொருழின் தோன்றல்
தொன்மை மொழியின் தோன்றல்
வள்ளல் தமிழ் வள்ளல்
வள்ளுவனார் வருகை
சொர்ணமான பூமி
சுவிற்சர்லாந்தில் வந்தார்.