இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை மறக்காம எப்பவும் கஷ்டப்படுவாங்களாம்!
காதல் என்பது மிகவும் அழகானது மற்றும் ஆழமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காதலிப்பவர்கள் அனைவரும் கல்யாணம் செய்து கொள்வதில்லை. பலருக்கு காதல் கல்யாணத்தில் கைகூடுகிறது. பலருக்கு அது தோல்வியை கொடுக்கிறது. காதலில் தோல்வியுற்றவர்கள்,
அதிலிருந்து வெளியேறி வேறொரு வாழ்க்கையை மற்றும் பாதையை தீர்மானித்து செல்கிறார்கள். ஆனால், சிலரால் தங்கள் முன்னாள் காதலனை அல்லது காதலியை மறக்கவே முடியாமல் தவிர்க்கிறார்கள். அவர்களின் கடந்தகால உறவின் நினைவுகள் அவர்களை எப்போதும் வேட்டையாடும் போது மற்றவர்களைப் பற்றியும் வேறு
விஷயங்களைப் பற்றியும் அவர்களால் சிந்திக்க கடினமாக இருக்கும்.காதலில் விழுவதும், மோசமான பிரிவுக்குப் பிறகு அந்த நபரிடமிருந்து விலகிச் செல்வதற்கும் காலநேரம் எடுக்கும். அந்த அதிர்ச்சி மற்றும் துக்கத்திலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.
குறிப்பாக அந்த நபர் உறவில் நிறைய முதலீடு செய்யும் போது, பிரிவை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். நீங்கள் இந்த நபர்களில் ஒருவராக இருந்தால், பிரிந்த பிறகு முன்னேற கடினமாக இருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, அவர்கள் ஒருவரிடம் உறுதியளிக்கும்போது,அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அது சரியாக நடக்காதபோது,அவர்கள் துக்கமடைந்து சோகம் மற்றும் ஏமாற்றத்தின் ஆழமான கடலில் விழுகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு அந்த கடலில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமானது. பெரும்பாலும் அவர்கள் அறையில் தனியாக அழுவதை நீங்கள் காணலாம்.
சிம்மம்சிம்ம ராசி நேயர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் தோற்றமளித்தாலும், பிரிந்து செல்லும் போது, இந்த ராசிக்காரர்கள் அனைவரும் சோகமாகவும், சோம்பலாகவும் இருப்பார்கள். தங்கள் உறவில் இருந்த நபரை மறப்பது அவர்களுக்கு மிகவும் கடினம். அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் பிரிவைத் தடுக்க என்ன செய்யலாம் அல்லது செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி அழுது புலம்புகிறார்கள்.
ரிஷபம்ரிஷப ராசி நேயர்கள் இந்த அம்சத்திற்கு வரும்போது அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கலாம். ஒருமுறை அவர்கள் தங்கள் மனதில் யாரோ ஒருவர் மீது காதல் வைத்தால், அவர்கள் அவர்களைவிட்டு விலகுவது
அல்லது பிரிவது மிகவும் கடினம். பிரிந்த பிறகும் அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை பற்றி நினைப்பதை நிறுத்த முடியாது. அதற்குத் தங்களை தாங்களே குறை மற்றும் குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பார்கள்.
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் செய்ய விரும்புவது நல்ல நினைவுகளை தங்கள் இதயங்களில் வைத்திருப்பதுதான். அவர்கள் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை விட்டுவிட முடியாததற்கு இதுவே ஒரே காரணம். கடந்த காலத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும்
என்ற அவர்களின் விருப்பம், அவர்கள் தங்கள் முன்னாள் உடன் கழித்த அனைத்து நல்ல நேரங்களையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. இப்படிப்பட்ட விஷயங்களை நினைக்கும் போது அவர்கள் எதை இழக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறது.
மிதுனம்மிதுன ராசி நேயர்கள் ஊர் சுற்றுவதன் மூலமும் மற்றவர்களுடன் பழகுவதன் மூலமும் அவர்கள் தங்கள் முன்னாள் நபரை மறக்க முயற்சித்தாலும், அவர்களால் அதை செய்ய முடியாது. மிதுன ராசிக்காரர்களுக்கு
தங்கள் முன்னாள் வாழ்க்கையை மறந்துவிட்டு முன்னேறுவது என்பது கடினமான செயல். அவர்கள் நிறையச் சுற்றித் திரிகிறார்கள் மற்றும் தங்கள் துக்கங்களை மறப்பதற்காக குடிப்பழக்கத்தை நோக்கித் திரும்புகிறார்கள்.