ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் திட்டம்

#Japan #India
Prasu
2 years ago
ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் திட்டம்

டெல்லியில் இன்று 14-வது இந்தியா ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார்.

இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இந்த பயணத்திற்கு முன்பாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், " உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இந்த பயணத்துடன் ஒத்துப்போகிறது. இதனால், சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஜப்பானும் இந்தியாவும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்"  என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும் பிரதமர் கிஷிடா நோக்கமாகக் கொண்டுள்ளார் என்றும், இந்த பயணத்தின்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று ஜப்பானின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!