இலங்கையில் இடம்பெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி - நன்றி கூறினார் விஜித ஹேரத்!
#SriLanka
#ADDA
#Vijitha Herath
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை இலங்கையில் விளையாட ஒப்புக்கொண்டமைக்காக பாகிஸ்தான் அரசுக்கு இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தனது நன்றியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.
இந்த முடிவை நல்லெண்ணத்தின் சின்னமாக விவரித்த அவர், இந்த நடவடிக்கை "விளையாட்டுத்திறன், நட்பு மற்றும் நமது இருதரப்பு உறவுகளின் வலிமையை" பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்