புதுவிதமாக வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

#TamilCinema
Prasu
4 years ago
புதுவிதமாக வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கிவுள்ளார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது.  நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்‌ஷன் மற்றும் டிராமாவாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தை புது விதமாக 3டி வடிவத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக 3டியில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவாக வெளியாகவுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4