சிறையிலிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விருது!

Mayoorikka
2 years ago
சிறையிலிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு  விருது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல சினிமா கலைஞருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

நேற்றிரவு கொழும்பில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான Slim-Kanter விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் பலமுறை மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.