சிக்கனமான முறையில் சுவைமிக்க சுறா மீன் பொரியல் வறுப்பது எப்படி?
#Cooking
#Fish
#Fry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை:
- சுறா மீன் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 10
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- சுறா மீன் துண்டுகளை, நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
- வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது)
- பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
- இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.