கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் 6 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்

#SriLanka #Container #drugs
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் 6 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட பழைய உலோக கொள்கலனொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் போதைப் பொருளை சுங்கத் திணைக்களத்தின் துறைமுகப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேயின் அளவு சுமார் 350 கிலோ என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொக்கெய்ன் கையிருப்பு சுமார் 6 பில்லியன் ரூபா பெறுமதியானதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணையில், கப்பல் இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், பழைய உலோகக் கொள்கலனொன்றின் பைகளில் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!