ஸ்டப்டு நண்டு தயார் செய்வது சோற்றுடன் உண்டு பாருங்கள். பிரமாதம்...
#Cooking
#Crab
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை
- நண்டு - ஒரு கிலோ
- வெங்காயம் - கால் கிலோ
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- பூண்டு - 10 பல்
- கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கெட்டியான தேங்காய் பால் - அரை கப்
- பிரெட் தூள் - 100 கிராம்
செய்முறை :
- முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
- நண்டின் மேல் ஓட்டை எடுத்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காய வைத்து எடுக்கவும்
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத் துண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு அதில் தேங்காய் பால், நண்டின் சதைப் பகுதி ஆகியவைகளைப் போட்டு கிளறி (சுருள வதக்கக் கூடாது) எடுத்து வைக்கவும்.
- காய வைத்த நண்டு ஓட்டில் சதைப் பகுதியை வைத்து திணிக்கவும். அதன் மேல் பிரெட் தூளைத் தூவி பேக் செய்யவும்.