ஆரோக்கியம் நிறைந்த முளைக்கீரை பொரித்த குழம்பு எளிதான முறையில் சமைப்பது எப்படி?
#Cooking
#Vegetable
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானப் பொருட்கள் :
- நறுக்கிய முளைக்கீரை - 5 கப்
- பயத்தம் பருப்பு - 100 கிராம்
- மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- வெங்காய வடகம் (சிறியது) - 2
- தேங்காய் துருவல் - அரை கப்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முளைக்கீரை பொரித்தக் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்த மல்லித்தழை ஆகிய வற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு, அதனுடன் கீரையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- கீரை வெந்ததும், அதனுடன் வேக வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் வெங்காய வடகத்தை போட்டு தாளித்து குழம்பில் சேர்த்து கலக்கினால் சுவையான முளைக்கீரை பொரித்தக் குழம்பு ரெடி.