ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள RRR படம் எப்படி இருக்கு- திரைவிமர்சனம்
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் பாகுபலி என்ற மெகா ஹிட் திரைப்படம் வெளியானது தொடர்ந்து ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் RRR என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் :
நிஜத்தில் இரு வெவ்வேறு இடங்களில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடுகிறார்கள் ராம் மற்றும் பீம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கதையாக கொடுத்துள்ள படம்தான் RRR. முதலில் நண்பர்களாக இருக்கும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் சூழ்நிலையால் இருவரும் பகைவராக மாறுகின்றனர். இவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றி
படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை சொல்லியாக வேண்டும். அந்த அளவிற்கு திரைக்கதையை கச்சிதமாக மிகப்பிரம்மாண்டமாக கொண்டு சென்றுள்ளார்.
ராம்சரண் ஜூனியர் என்டிஆர் என படத்தில் நடித்துள்ள அனைவரும் நீயா நானா என போட்டி கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைக்கின்றன.
படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.
செந்தில் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. VFX பணிகள் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. படம் முழுக்க பிரம்மாண்டம் பிரம்மிக்க வைக்கிறது.