தினமும் 100 புற்றுநோயாளிகள் இனங்காணப்படுகின்றனர் - துணை சுகாதார அமைச்சர் தகவல்!
தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி கூறுகிறார்.
'புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையத்தின்' திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் அமைந்துள்ள தொற்று நோய்கள் மருத்துவமனை கட்டிடத்தின் முதல் மாடியில் இது நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் தற்போது நாட்டின் 6 முக்கிய மருத்துவமனைகளில் செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த மையங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாளுக்கு நாள் பதிவாகும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஹன்சக விஜேமுனி, இந்த நோயாளிகள் நோயின் பிற்பகுதியில் காணப்படுவதாக வலியுறுத்தினார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்