ரகசியமாய் நிச்சயதார்த்தம் நடத்திய நட்சத்திர தம்பதி..

Prabha Praneetha
4 years ago
ரகசியமாய் நிச்சயதார்த்தம் நடத்திய நட்சத்திர தம்பதி..

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே நிக்கி கல்ராணி ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அதன்பிறகு குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இது வதந்தியாக இருக்கும் என பலரும் கருதிய நிலையில் இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்தம் எக்ஸ்பிரஸ் அவன்யூ பக்கத்தில் உள்ள நிக்கி கல்ராணி பிளாட்டில் படு ஜோராக நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் நிக்கி கல்ராணி,அவரை தமிழில் அறிமுகப்படுத்திய நபர்களை கூட அழைக்க வில்லையாம்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு வேண்டியவர், வேண்டாதவர்கள் அனைவரையும் அழைத்து விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி உள்ளனர்.
 

நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நிக்கி கல்ராணியின் இடியட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில்மிக விரைவில் நிக்கிகல்ராணி, ஆதி திருமணம் நடக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4