திரையரங்கை அதிர வைக்கும் RRR முதல் நாளில் வசூல் சாதனை!

Nila
4 years ago
திரையரங்கை அதிர வைக்கும் RRR முதல் நாளில் வசூல் சாதனை!

பாகுபலி -2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில்  ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). உருவாகி உள்ளது.

தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதையாகும்.

இப்படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாக நடித்துள்ளனர்.

450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, ஆர்ஆர் ஆர் படத்தின் இந்தி பதிப்பு, முதல் நாளில் ரூ 18 கோடியை வசூலித்துள்ளது.
 
தெலுங்கு மாநிலங்களில் இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4