நயன்தாரா பற்றிய ரகசியத்தை வெளிப்படையாக சொன்ன பயில்வான்..
பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் ஆகியோரை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்.
அதேபோல் சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் பல்வேறு காரணங்களை பயில்வான் தனது யூடியூப் சேனல் மூலம் சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் குறிப்பாக பெண் நடிகைகளை தாக்கி மோசமான கருத்துக்கள் மூலம் தனது யூடியூப் சேனலில் போட்டு வருவதால் இவர் மீது புகார் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா மீது பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.
இவர்களது திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா பல நடிகர்களுடன் நெருக்கமாக இருந்தார் என்றும், அவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் என்றும் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்றும் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் என்ற பொய்யான தகவலை ரங்கநாதன் பரப்பி உள்ளார்.
இதனால் இவர் மீது திவ்யா என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தொடர்ந்து பெண்களைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமாவும் பேசி வருகிறார்.
பல திரை பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் பயில்வான் இதை நிறுத்திய பாடு இல்லை. இந்நிலையில் தற்போது புகார் அளித்து இருப்பதால் இவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறத என்பதை பார்ப்போம்.