வில் ஸ்மித் கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததற்கு காரணம் இதுதானா? மேடையில் கண்ணீருடன் உருக்கம்!!
பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் ஆஸ்கார் விருது வழங்கும் விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் தான் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
நடிகர் வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது, தொகுப்பாளர் கிறிட் ராக் என்பவரை எதிர்பாராத விதமாக வில் ஸ்மித் ஓங்கி அறைந்தார்.
அதற்கு காரணம் அவர் மனைவியின் சிகையலங்காரம் பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துகொண்டிருந்துள்ளார்.
நடிகர் வில் ஸ்மித் மனைவி Alopecia என்ற நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், முடி இல்லாமல் இருந்துள்ளார். இதனை கிண்டால் செய்ததாலே அடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இதைகண்டு சிரித்துகொண்டிருந்த வில் ஸ்மித் பொறுமை இழந்து அடித்துள்ளார். பின் என் மனைவியின் பெயரை சொல்லாதே என கெட்ட வார்த்தையில் திட்டி சொன்னார்.
அதன்பிறகு பேசிய வில், உருக்கமாக “நான் அகாடமிக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என்னுடைய சக nominee-களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
இது ஒரு அழகான தருணம். நான் விருது வென்றதற்காக அழவில்லை. கிங் ரிச்சர்ட் குழுவினர் மற்றும் வீனஸ் - செரினா வில்லியம்ஸ் குடும்பத்துக்கு நன்றி.
மேலும், நான் ஒரு crazy father போல இருக்கிறேன். காதல் உங்களை crazy-யான விஷயங்களை செய்ய வைக்கும் என தான் மேடையில் தொகுப்பாளரை அறைந்தது பற்றி கூறி இருக்கிறார்.
நடிகர் வில் ஸ்மித்தின் மனைவிக்கு Alopecia என்ற நோய் பாதிக்கப்பட்டது, இந்த நோய் பாதிப்பு, முடியை கொத்து கொத்தாக விழச்செய்யுமாம்.
இந்த நோய் முடி உதிர்வு ஒருவருக்கு ஒருவர் மாறுபடுமாம். ஒரு சிலருக்கு இது தீவிரமானதாக மாறுபடலாம்.
உரிய சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அதிகமான பாதிப்ப்பை ஏற்படுத்தலாம். இந்த நோய் யாரை வேண்டுமானாலும், தாக்கலாம்.
இதற்கு சிகிச்சை இல்லை என்றாலும், தீர்வுகள் உள்ளன. மருத்துவரை அணுகி, ஆட்டோ இம்யூன் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கலாம்.