வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் மத்திய அரசு!
Prabha Praneetha
2 years ago
ஐந்து இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச விசாக்கள் வழங்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்பு பாதைக்கு கொண்டு வரும் நோக்கில் விசா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் 170 நாடுகளில் மீண்டும் இ-விசா வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி இந்திய தூதரகங்களுக்கு விசாவுக்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.