இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உலகமயமாக்கல் கொள்கையின் கண்மூடித்தனமான பின்பற்றுதலே காரணம்
இலங்கையின் தவறுகளில் இருந்து இந்திய அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, அந்த நாட்டின் தீவிரமான உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதே கொள்கையை இந்தியா பின்பற்றி வரும் நிலையில், இந்தியாவுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே இந்திய பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலகோபால் கூறியதாக எகனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உலகமயமாக்கல் கொள்கையின் கண்மூடித்தனமான பின்பற்றுதலே காரணம் என்று குற்றம் சாட்டிய பாலகோபால், அங்குள்ள அரசாங்கங்கள் சுற்றுலா போன்ற வெளிநாட்டு வருமானம் ஈட்டும் துறைகளில் முழுமையாக கவனம் செலுத்தியதாகவும், கொரோனா தொற்றுநோய்களின் போது பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சியின் விளைவாக விவசாயம் போன்ற முதன்மைத் துறைகளை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம், தனது மொத்த வரவுசெலவுத்திட்டத்தி;ல் பாதிக்கு மேல் கடன் பெறுகிறது.
முறையாக வரிகளை வசூலிப்பதில்லை. அத்துடன் மத்திய அரசாங்கம் உற்பத்தித் துறைகளில் இஅதிகப் பணத்தை முதலீடு செய்வதில்லை என்றும் பாலகோபால் குற்றம் சுமத்தியுள்ளார் .