சுவையான கருவாடு வதக்கல் சமைத்துப் பாருங்கள்.
#Cooking
#Fish
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- வஞ்சிர மீன் கருவாடு - 250 கிராம்
- சின்ன வெங்காயம் - 200 கிராம்
- நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
- பச்சை மிளகாய் - 6
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- கருவாடை துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை வட்ட வடிவமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கிளறி விடவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கியதும் கருவாடு துண்டுகளைப் போட்டு, மெதுவாகப் புரட்டி, கிளறி இறக்கி பரிமாறவும்.
- கருவாடில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்.