நாளைக்கு சுழற்சி முறையிலான மின்வெட்டு - எந்தப் பகுதியில் என்ன நேரம் எவ்வளவு மணித்தியாலம் - முழு விபரங்கள் உள்ளே

Nila
2 years ago
நாளைக்கு சுழற்சி முறையிலான மின்வெட்டு - எந்தப் பகுதியில் என்ன நேரம் எவ்வளவு மணித்தியாலம் - முழு விபரங்கள் உள்ளே

நாடளாவிய ரீதியில் சில வலயங்களில் 11 மணித்தியாலங்களும் , மேலும் சில வலயங்களில் 13 மணித்தியாலங்களும் நாளைய தினமும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

G,H,I,J,K,L
அதற்கமைய இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரை 3 மணித்தியாலங்களும் , காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

A,B,C,D,E,F
இதே வேளை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் , நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என 13 மணித்தியாலங்கள் A,B,C,D,E,F வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

T,U,V,W
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3 மணித்தியாலங்களும் , காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6  மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள்  T,U,V,W வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

P,Q,R,S
அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் , நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணித்தியாலங்களும் , மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணித்தியாலங்களும் என 11 மணித்தியாலங்கள் P,Q,R,S வலயங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

M,N,O,X,Y,Z
காலை 5.30 முதல் காலை 9 மணி வரையும் , மாலை 4 மணி முதல் மாலை 6 மணிவரையும் 5 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் M,N,O,X,Y,Z வலயங்களிலும் , CC1 வயலத்தில் காலை 6 மணி முதல் முற்பகல் 9.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.