எதிர்வரும் வாரம் முதல் 4 நாட்கள் மட்டுமே வேலை - சுவிஸில் வரவுள்ள புதிய சட்டம்

Nila
2 years ago
எதிர்வரும் வாரம் முதல் 4 நாட்கள் மட்டுமே வேலை - சுவிஸில் வரவுள்ள புதிய சட்டம்

சுவிஸ் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு வருவது இன்றே கடைசி என்று கூறியுள்ளது சுவிஸ் அரசு.

ஆம், அடுத்த வெள்ளிக்கிழமை சுவிஸ் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டியதில்லை.

அதாவது, சில நாடுகள், வார இறுதியில் இரண்டு நாட்கள் ஓய்வு அளிப்பதற்கு பதிலாக, மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கத் துவங்கியுள்ளன. அதனால், மீதமுள்ள பணி நாட்களில் சிறந்த முறையில் பணியாளர்கள் உற்பத்தியை அளிப்பதாகவும், பணியில் திருப்தியை பெறுவதாகவும் (production and staff contentment) நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சுவிட்சர்லாந்திலும் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்ற முறைமையை அமுல்படுத்துவது தொடர்பாக, தொடர்ந்து பல நிறுவனங்களில் சோதனை செய்து பார்த்தபின்பு, அடுத்த வாரத்திலிருந்து அந்த நடைமுறையை அமுல்படுத்த இருப்பதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

இன்னொரு முக்கிய விடயம், இப்படி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி செய்வதால், ஊதியத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.

அதாவது, இதற்கு முன் பணியாளர்கள் பெற்று வந்த அதே ஊதியம், எந்த மாற்றமும் இன்றி, இனியும் அவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுவதை புதிய சட்டம் ஒன்று உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.