அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தனுஷ்

Prabha Praneetha
4 years ago
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தனுஷ்

தற்போது தமிழ் ஹீரோக்கள் தெலுங்கு படங்களின் பக்கம் திரும்பியுள்ளனர். முன்னதாக அவர்கள் தங்கள் தமிழ் திரைப்படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர்.

இதற்கு முன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் 1 அல்லது 2 நேரடி தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழை தாண்டி மார்க்கெட்டை விரிவுப்படுத்த தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கில் நேரடி படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து “காதல் கொண்டேன்”, “புதுப்பேட்டை”, “பொல்லாதவன் “, “ஆடுகளம்”, “வடசென்னை”, “அசுரன்” திரைப்படங்களின் மூலம் தன்னை நோக்கி வைக்கப்பட்ட கேலி, கிண்டல்களை தாண்டி தன்னை ஒரு நடிகராகவும் மாஸ் ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. தனது படங்களாலும், அதில் அவர் உழைத்த உழைப்பாலும், மற்ற மொழிகளிலும் அதே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தெலுங்கிலும் அவர் நடிப்பில் வெளியான 3, ரகுவரன் பி.டெக் மற்றும் மாரி உள்ளிட்ட படங்கள் பிளாக்பஸ்டர்களாக அமைந்தன.

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” என்ற இருமொழி படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது ஹாலிவுட் அறிமுகமான ‘தி கிரே மேன்’ படத்திற்கான ஷெட்யூலையும் முடித்துவிட்டார்.

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வரும் படம் ‘வாத்தி’. தற்போது டோலிவுட் இயக்குனர் ஒருவருடன் தனுஷ் மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் புஷ்பா 2 இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்த கையோடு தெலுங்கில் கமர்சியல் ஹிட் கொடுக்கும் டைரக்டராக பெயர் பெற்ற போயபட்டி ஸ்ரீனுவுடன் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் போயபட்டி ஸ்ரீனு இயக்கி பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த அகண்டா திரைப்படம் இரண்டு தெலுங்கு தேசத்திலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து அவர் இயக்கும் பான் இந்தியா திரைப்படமான ஒன்றில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இரண்டு திரையுலகின் மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடிக்க, மாஸ் கம்ர்ஷியல் டைரக்டர் இயக்க உள்ள இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் தற்போதே எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4