இரவு வேளைக்கு உடனடியாக செய்யக்கூடிய சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி?

#Cooking #dinner #meal
இரவு வேளைக்கு உடனடியாக செய்யக்கூடிய சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி?

தேவையானவை :

  • மைதா மாவு 500 கிராம்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்

செய்முறை

  1. மைதா மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து, சற்று இளக்க மாகப் பிசைந்து, நல்லெண்ணெய் ஊற்றி மறுபடியும் பிசைந்து, பாத்திரத்தில் போட்டு, 2 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  2. அதன்பின் பூரிப்பலகை மீது சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும். 
  3. சிறிதளவு மாவை எடுத்து, உருண்டை யாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, விரல்களால் தட்டி பலகை அளவு இழுத்து, விரிக்கவும். 
  4. விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாகத் தட்டிக் கொள்ளவும். 
  5. தோசை கல்லில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும். 
  6. சுற்றிலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுத்து, பரிமாறவும். இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரிக்கவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!