தமிழ்நாட்டில் தெருச்சந்தியில் குடும்பிப்பிடி சண்டையிட்டுக்கொண்ட இரு மாணவிகள்...

#Tamil Nadu #School #children
தமிழ்நாட்டில் தெருச்சந்தியில் குடும்பிப்பிடி சண்டையிட்டுக்கொண்ட இரு மாணவிகள்...

சென்னை அண்ணாநகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் முடியை பிடித்துக்கொண்டு சாலையில் தாக்கி கொண்டனர்.

குறிப்பாக தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு இரு மாணவிகளும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் அடித்து கொள்வதை அருகிலிருந்த மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.  இந்த வீடியோ வைரலனாதால் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் வரவில்லை. இதே போல கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4