இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி - டொலரின் விற்பனை விலை 308.49 ரூபாவாக பதிவு

#SriLanka #Dollar
Prasu
4 years ago
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி - டொலரின் விற்பனை விலை 308.49 ரூபாவாக பதிவு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (05) 308.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 320 ரூபாவாக அறிவித்துள்ளன.

அதன்படி, வணிக வங்கிகள் சிலவற்றில் டொலரின் விற்பனை விலை பின்வருமாறு.

  • இலங்கை வங்கி - ரூ. 310.00
  • மக்கள் வங்கி - ரூ. 306.99
  • சம்பத் வங்கி - ரூ. 320.00
  • செலான் வங்கி - ரூ.320.00
  • வணிக வங்கி - ரூ. 308.00
  • HNB - ரூ. 310.00
  • NDB - ரூ. 320.00
  • DFCC - ரூ. 310.00


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4