நிதியமைச்சராக பதவியேற்கும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பந்துல சம்மதம்

#SriLanka #Minister
நிதியமைச்சராக பதவியேற்கும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பந்துல சம்மதம்

முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவை நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கோரிக்கைக்கு முன்னாள் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற குழுவின் அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக தொடர்ந்தும் செயற்படுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேற்று முதல் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4